Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, November 11, 2017

சாதகம் இல்லாதவர்கள் பிறந்த நாள்-நேரம் அறிதல் - பிருகத் ஜாதகா – 198

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


4.     சோதிட அறிவியலின் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட இராசியில் சூரியன் கடக்கும் பாகையானது ஒருவரின் பிறந்த நாளின் சந்திர நாளாகும்(1). பிரசன்ன இலக்கினம் பகல் இராசியாக இருந்தால், பிறப்பு இரவில் நிகழ்ந்திருக்கும், இரவு இராசியாக இருந்தால், பிறப்பானது பகலில் நிகழ்ந்திருக்கும். உதய நேரம் கடந்த  உதய இராசியின் பகுதியைக் கொண்டு பிறந்த பொழுதின் கதியைத் தீர்மானிக்க முடியும்(2).


குறிப்பு:

(1)  வளர்பிறைச் சந்திரனின் முதல் சந்திர நாளிலிருன்து கணக்கிட வேண்டும், ஒருவேளை, பிறக்கும் நேரத்தில் தனுசுவின் 24வது பாகையில் சூரியன் இருந்தால், பிறந்த பொழுதான சந்திர நாள் அல்லது திதி என்பது, வளர்பிறை சந்திர நாளில் தொடங்கி கணக்கிட 24 வது நாள் அல்லது  24 – 15 அல்லது தேய்பிறயின் 9வது நாள் என்பதாகும்.

(2)  பகல் பொழுதின் நேரம் அல்லது இரவின் நேரம் என்பது உதய இராசியினைக் கொண்டும் இராசியில் உதயம் கடந்த பொழுதின் ஸ்புடத்தினைக் கொண்டும் அறியவேண்டும். விதி மூன்றின்படி, சரியான பிறந்த நேரத்தினை சூரிய உதயம் அல்லது சூரிய மறவினைக் கொண்டு அறிய முடியும். அவ்வாறு அதனை அறிய முடியுமானால், வான்கணித அட்டவனை அல்லது பஞ்சாங்கத்தினைக் கொண்டு, பிறந்த சாதகக் கட்டம் தயாரிக்க முடியும். இதன்படி, முதல் நான்கு பத்திகள், பிரசன்ன இலக்கினத்தின் மூலம் ஒருவரின் பிறந்த நேரத்தினை அறியும் வகையினைக் கூறுகிறது.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


No comments: