Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, November 16, 2017

சாதகம் இல்லாதவர்கள் – இலக்கினம் இருக்கும் இராசி - பிருகத் ஜாதகா – 200


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


6. ஒருவர் பிறக்கும்போது சந்திரன் இருக்கும் வீடானது, கேள்வி கேட்கும்போது சந்திரன் இருக்கும் இராசியினால் நீக்கப்படும் இராசிகளாக இருக்கலாம், அதாவது கேள்வி கேட்கும்போது சந்திரனானது உதய இராசியால் விலக்கப்படும்(1). ஆனால் உதய இராசியானது மீனமாக இருந்தால், மீன இராசியே, அவர் பிறக்கும்போது சந்திரன் உள்ள இராசியாக இருக்கும். (சந்தேகம் எழும் எனில்) இராசியினை, அவர் கொண்டுவந்துள்ள ஏதேனும் உணவு பொருட்கள், வேறேதேனும் வடிவங்களின் தோற்றம் அல்லது அந்த நேரத்தில் உணரப்படும் ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(2).


குறிப்புகள்:

(1)  எடுத்துக்காட்டாக, கேள்வி கேட்கும் நேரத்தில் விருச்சிகம் உதயமாகவும் மீனம் சந்திரன் இருக்கும் இராசியாகவும் இருப்பதாகக் கொள்வோம். விருச்சிகத்திலிருந்து மீனமானது 5வது வீடு; மீனத்திலிருந்து 5வது வீடு கடகம். எனவே, கடகமானது அந்த மனிதர் பிறந்தபோது சந்திரன் இருந்த இராசியாகும்.

(2)  பொருட்களின் வடிவம் அல்லது இராசியோடு தொடர்புடைய உயிரினங்கள் மற்றும் உயிரினங்கள் எழுப்பும் ஒலி இவற்றைக் கொண்டு சந்திரன் இருக்கும் இராசியினைத் தீர்மானிக்க வேண்டும். இத்தகைய எல்ல நிலைகளிலும், சோதிடரின் பரந்த அறிவானது பல்வேறு குறியீடுகளின் மூலம் அறிந்துகொள்ள பயன்படவேண்டும்.


7.     கேள்வி கேட்கும் நேரத்தில் உதய நவாம்சத்தின் அதிபதி இருக்கும் வீடே பிறந்தபோது  உள்ள உதய இராசியாகும்.(1). அல்லது பிறக்கும்போது உள்ள உதய இராசி என்பது பிரசன்ன இலக்கினத்திலிருந்து விலக்கப்படும் இராசிகள், அதாவது கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள உதய திரேக்கானத்திலிருந்து விலக்கப்பட்ட சூரியன் இருக்கும் திரேக்கானமாகும்(2).


குறிப்புகள்:
(1)  கேள்வி கேட்கும் நேரத்தில் உதய திரேக்கானமானது தனுசுவாக இருந்தால், பிறக்கும்போது உள்ள உதய இராசியானது தனுசுவாகும்.

(2)  அதாவது, கேள்வி கேட்கும் நேரத்தில் உதய திரேக்கானமானது, மிதுனத்தின் இரண்டாவது திரேக்கானமாக இருந்து, அதே நேரத்தில் சூரியன் தனுசுவின் 3வது திரேக்கானத்தில் இருப்பது. ஒன்றிலிருந்து மற்றதற்கு இடையே உள்ள திரேக்கானம் மொத்தம் 20. எனவே, பிறக்கும்போது உள்ள உதய இராசி என்பது மிதுனத்திலிருந்து 20வது வீடாகும்.; 20-லிருந்து 12-ஐக் கழிக்க, மிதுனத்திலிருந்து 8வது வீடு, அதாவது மகரத்தின் வீடு.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

No comments: