வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல்
1. மாயா, யவனாச்சாரியார், மனித்தா மற்றும் பராசரரின் கூற்றுப்படி, சூரியன், சந்திரன் மற்றும் இதர கோள்களின் அதிகபட்ச ஆண்டுகள்(1), அதாவது அத்தகைய கோள்கள் அவைகளின் உச்ச பாகையில் இருக்கும்போது, முறையே 19, 25, 15, 12, 15, 21 மற்றும் 20 ஆகும்.
குறிப்புகள்: (திரு. சிதம்பரம் அவர்கள்)
(1)
அதாவது சவன வருடம் – ஒரு ஆண்டு என்பது 360 சவன நாட்கள் கொண்டது. சவன நாள் என்பது, சூரிய உதயத்தில் தொடங்கி சூரியன் மறைவில் முடியும்.
ஒரு சௌரா அல்லது சூரிய வருடமானது
365.242264 நாட்களைக் கொண்டது.
(2)
இந்தப் பகுதியில், பிறக்கும்போது இருக்கும் கோள்களின் நிலையைக் கொண்டு, மனிதன் மற்றும் விலங்குகளின் உயிர்வாழ் நாட்களின் கால அளவை தீர்மானிக்கும் பலவேறு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர், பிண்டாயுர்தயம் என்றால் என்ன என்பதை முதலில் விளக்குகிறார்.
சூரியன் தனது உச்ச பாகையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள்
|
19
|
சந்திரன் தனது உச்ச பாகையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள்
|
25
|
செவ்வாய் தனது உச்ச பாகையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள்
|
15
|
புதன் தனது உச்ச பாகையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள்
|
12
|
வியாழன் தனது உச்ச பாகையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள்
|
15
|
வெள்ளி தனது உச்ச பாகையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள்
|
21
|
சனி தனது உச்ச பாகையில் இருக்கும்போது கொடுக்கும் ஆண்டுகள்
|
20
|
பல்வேறு கோள்களின் உச்ச ராசி மற்றும் அவற்றின் உச்ச பாகைகள், பகுதி-1, பத்தி-13ல் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர்வாழ் நாட்களைத் தீர்மானிக்கும் முன்பு, மேலே கொடுக்கப்பட்ட ஆண்டுகளில் பல்வேறு கழித்தல் கணக்குகளை மேற்கொண்டபின் அதற்குட்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும்.
குறிப்பு: (நிமித்திகன்)
இப் பகுதியில் சாதகத்தில் கோள்கள்
இருக்கும் நிலையினைக் கொண்டு உயிர்வாழ் நாட்களைத் தீர்மானிக்கும் முறைகள் பற்றி ஆசிரியர்
விளக்குகிறார். ஆசிரியர் தமது கருத்தோடு மட்டுமின்றி அவர்காலத்தில் வாழந்த பிற சோதிட
ஆசிரியர்கள், அவருக்கும் முந்தையவர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் பல செய்யுள்களின்
ஒப்பீடு செய்கிறார். அவ்வாறு விளக்கப்படும்
கணித முறைகளை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பயிற்சியுடன் படிக்க முற்பட்டால் மட்டுமே எளிதில்
விளங்கும். இருப்பினும் உரையாசிரியர் திரு சிதம்பரம் அவர்கள் கொடுத்துள்ள விளக்கங்கள்
எளிதில் புரியும்படி இருந்தாலும், அதற்கும் பயிற்சி வேண்டும். இதில் மிகவும் வருத்தத்திற்குரிய
செய்தி என்னவென்றால், தற்போதைய சோதிட விற்பன்னர்கள் இக் கணித முறைகளைப் பின்பற்றுகிறார்களா
என்பது கேள்விக் குறிதான். யாரையும் குறைத்து மதிப்பிடுவதாக என்ன வேண்டாம். ஆனால் தற்போதைய
அறிஞர் பெருமக்களுக்கு இவ்வாறான கணித முறை இருக்கிறது என்பது தெரியுமா என்பதும் கேள்விக்
குறிதான். இப்பகுதியைப் பொருத்தவரையில் நான் மொழிபெயர்ப்பு மட்டுமே செய்துள்ளேன். நான்
இதை மீண்டும் மீண்டும் படித்து தெளிவு பெற வேண்டிய நிலையிலேயே இருக்கிறேன் என்பதே உண்மை.
........உயிர்வாழ் நாட்கள் தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment