வீடுகளில் கோள்களின் நிலை (அ) வலிமை
இராசி மண்டலத்தினை மேசம் முதல் மீனம் வரை பன்னிரெண்டு
இராசிகளாகப் பிரித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கோளினை அவ்வீட்டிற்கு உரிய அதிபதிகளாகப்
பிரித்திருப்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம். அதில், ஒவ்வொரு கோளிற்கும் இரண்டு
வீடுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதையும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் மட்டும்
முறையே சிம்மம் மற்றும் கடகம் என ஒரே ஒரு வீடுமட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும்,
அவ்வாறக கோள்கள் பிரிக்கப்பட்டதிற்கான வானியல் சார்ந்த விளக்கங்களையும் பதிவு செய்துள்ளோம்.
இனி, சோதிடப் பயன்பாட்டில் ஒவ்வொரு வீட்டிலும்
கோள்களின் வலிமை எப்படி பார்க்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
முதலில், வீடுகளோடு கோள்களுக்கு உள்ள சார்புகளைக்
காண்போம். பின்னர் தனித்தனியே கோள்களோடு ஒப்புமை செய்வோம். பொதுவாக இவ்வகை நிலைப்பாட்டினை
ஏழு வகையாக முறைப்படுத்தியுள்ளனர். அவைகள் முறையே:
1. ஆட்சி
2. மூலத்
திரிகோணம்
3. உச்சம்
4. நீச்சம்
5. நட்பு
6. பகை
7. சமம்
இந்த ஏழுவகைச் சார்புகளின் பொதுவான விதிமுறைகளை ஒவ்வொன்றாகப்
பார்த்துவிட்டு பின்னர் அவற்றை கோள்களோடும் அவைகளுக்குரிய வீடுகளோடும் ஒப்பீடு செய்வோம்.
ஆட்சி:
அதிபதி என்பது அந்தந்த வீட்டிற்கு உரிய கோள்கள்.
இது பற்றி ஏற்கனவே விரிவாகப் பதிவு செய்துவிட்டோம். ஆட்சி என்பது ஒரு வீட்டின் அதிபதி
அதற்கு உரிய வீட்டில் இருப்பது. எடுத்துக் காட்டாக – செவ்வாய் கோளானது தமக்குரிய வீடுகளான
மேசம் அல்லது விருச்சிகத்தில் இருப்பது. ஒரு
வீட்டின் அதிபதி தமது சொந்த வீட்டில், அதாவது தமக்கு உரிய இராசியில் இருந்தால் அது
பலமிக்கதாக இருக்கும் என்பது சோதிட விதி. அதாவது அக்கோள் மற்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும்
பலமிக்கதாக இருக்கும். ஒரு கோளின் பலம் என்பது அது இருக்கும் இடத்தைச் சார்ந்தே இருக்கும்
என்பதால், இங்கு அத்தகைய கோளானது அதற்குரிய இட ஒதுக்கீட்டில் இடம்பெறும்போது வலிமையுடன்
இருக்கும் என்பது ஏற்புடையதாகவே உள்ளது. அதே வேளையில், அதன் வலிமையின் சதவிகிதம் என்பது
முழுமையாக இருப்பதில்லை. அதாவது 100% வலிமையாக இருப்பதில்லை. பொதுவாக சொந்த வீட்டில்
அதாவது ஆட்சியில் இருக்கும் கோள்கள் 50% வலிமையுடனேயே இருக்கும் என சோதிட நூல்கள் கூறுகின்றன.
இதனை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். அதாவது
ஒரு கோள் அதிக பட்சமாக வலிமையுடன் இருப்பது அது தமது உச்ச நிலையில் இருக்கும்போதுதான்.
எனவே ஒரு கோள் தனது சொந்த வீட்டில் இருப்பது என்பது உச்ச நிலையினை ஒப்பு நோக்கும்போது
பாதியளவே வலிமையுடன் இருக்கும் என்பதே உண்மை. ஏனெனில் ஆட்சிக்கும் உச்சத்திற்கு இடையில்
மூலத்திரிகோணம் எனும் நிலை உள்ளது. எனவே இது ஏற்புடைய விளக்கமும்கூட. இது ஒரு பொது
விளக்கம் மட்டுமே.
இங்கு ஒரு முக்கியமான தகவலைக் கூறவேண்டியுள்ளது.
ஒரு கோள் ஆட்சி நிலையில் இருந்தாலும், அதற்குரிய வலிமையை முழுமையாக பெறமுடியாது எனும்
கணிதமும் உள்ளது. ஏனெனில் ஒரு கோளின் உண்மையான பலத்தினை சட்பலம் கணக்கிடுவதன் மூலம்
மட்டுமே அறிய முடியும். [ஒரு கோள் மிகச்சரியாக எவ்வளவு பலமுடன் இருக்கிறது என்பதை கணக்கிடும்
முறைக்கு சட்பலம் என்பது பெயர். அதில் பல்வேறு கணக்கிடு முறைகள் இருக்கின்றன. அது பற்றி
பின்னர் பார்ப்போம்].
எனவே, ஒரு கோள் ஆட்சி நிலையில் இருக்கிறது
என்றால் அது தமக்குரிய வீட்டில், அதிபதியாக இருக்கிறது என்பது பொருள். பொது விதியாக
அதன் பலம் 50% சதவீதமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.
அடுத்து..
மூலத்திரி கோணம்
No comments:
Post a Comment