வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
7. இந்த பிண்டாயுர்தய முறையானது விஷ்னுகுப்தர்(1), தேவசுவாமி, சித்தசேனா போன்றவர்களால் பின்பற்றப்பட்டுள்ளது. பால அரிஷ்டம் அல்லது இளம் வயது மரணத்திற்கு(2) உரிய 8 வயதினை நீக்கிவிட்டு பார்த்தால், பிண்டாயுர்தய முறையில் முக்கிய குறைபாடு என்னவெனில், எந்த ஒரு சாதகமும் 20 ஆண்டுகளுக்கு(3) குறைவாகக் கொடுக்காது.
குறிப்பு:(சிதம்பரம்)
(1)
சாணக்கியர் என்று அழைக்கப்பட்டவர்தான் விஷ்னுகுப்தர்.
(2)
அதற்கு எந்தவித ஆயுர்தயமும் பொருந்தாது.
(3)
இந்த பத்தியானது ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல என்று உரையாசிரியர் கருதுகிறார்; கீழே கொடுக்கப்படும் விளக்கத்தின்படி, பிண்டாயுர்தயம் 20 ஆண்டுகளுக்கு கீழாக கொடுப்பதால், பிண்டாயுர்தயம் குறித்த குறிப்பின் மீது மறுப்பு தெரிவிக்கப்பட்டு, கீழே கொடுக்கப்பட்ட சாதகத்தை எடுத்துக் கொள்கிறார். இலக்கினமானது கும்பத்தின் முதல் நவாம்சமாக இருக்கிறது; சூரியன், சந்திரன், சுக்கிரன் உச்ச பாகையில் உள்ளன; புதன், வியாழன், சனி நீச்ச பாகையில் உள்ளன; செவ்வாய் கும்பத்தின் 28வது பாகையில் உள்ளது.
சுக்கிரன்
புதன்
|
சூரியன்
சனி
|
சந்திரன்
|
|
இலக்கினம்
செவ்வாய்
|
இராசி சக்கரம்
|
|
|
வியாழன்
|
|
||
|
|
|
|
இப்போது,
சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவை அவைகளின் உச்ச பாகையில் இருக்கின்றன,
அவைகளின் ஆண்டுகள் முறையே 19, 25 மற்றும் 21; புதன், வியாழன், சனி ஆகியவை அவைகளின்
நீச்ச பாகையில் உள்ளன, அவைகளின் ஆண்டுகள் என்பது அவைகளின் அதிகபட்ச ஆண்டுகளில்
பாதியாகும், அதாவது 12, 15, 20 ஆகியவற்றில் பாதி அல்லது முறையே 6, 7½, 10 ஆகும்.
இப்போது, மகரத்தின் 28வது பாகை செவ்வாயின் உச்ச பாகையாக இருக்க, அது கும்பத்தின் 28வது
பாகையில் இருக்கிறது, அதாவது, அது தனது உச்ச பாகையிலிருந்து மிகச்சரியாக 30
பாகைகள் விலகி இருக்கிறது. மகரத்தின் 28வது உச்ச பாகையில் அதன் அதிக பட்ச ஆண்டுகள்
15; எனவே 30 பாகைகள் அல்லது ஒரு இராசி என்பது நமக்கு கொடுக்கக் கூடிய ஆண்டுகள்
15/12 அல்லது 1 ஆண்டு 3 மாதங்கள். அதனை 15 ஆண்டுகளில் கழிக்க, நமக்குக் கிடைப்பது
செவ்வாயின் ஆண்டுகளில், 13 ஆண்டுகள்- 9 மாதங்கள். கும்பமானது உதயத்தின்
ஆரம்பத்தில் இருக்க, இலக்கினம் நமக்குக் கொடுக்கும் ஆண்டுகள் ஏதுமில்லை; ஆகவே,
இந்த நிலையில் கோள்களின் ஆண்டுகள் கீழ்வருமாறு:
சூரியன் – 19 ஆண்டுகள்
|
புதன் – 6 ஆண்டுகள்
|
சந்திரன் – 25 ஆண்டுகள்
|
வியாழன் – 7 ஆண்டுகள் 6 மாதங்கள்
|
வெள்ளி – 21 ஆண்டுகள்
|
சனி – 10 ஆண்டுகள்
|
செவ்வாய் – 13 ஆண்டுகள் 9 மாதங்கள்
|
இப்போது,
சுபக் கோளான வியாழன், உதயத்திலிருந்து 12வது வீட்டில் இருப்பதால், அதன் ஆண்டானது
பாதியளவு குறைக்கப்படும்; அதன்படி, அவ்வாறு கழித்த பின், அது நமக்குக் கொடுப்பது 3
ஆண்டுகள் 9 மாதங்கள். மேலும் அனைத்து கோள்களும்
நட்பு வீட்டில் இருப்பதால், சத்ரு-க்ஷேத்ரஹரணா செய்ய வேண்டிய தேவை எழவில்லை.
சனியானது சூரியனுக்கு 10 பாகைக்குள் இருப்பதால், அஸ்தங்கமாகி உள்ளது; ஆனால் அதன்
வருடங்களானது எவ்வித குறைப்பிற்கும் உள்ளாகாது; அதன்படி, அது நமக்குக் கொடுக்கும்
ஆண்டுகள் 10 வருடங்கள். அதன்படி, நமக்கு கிடைப்பதாவது:
சூரியன் – 19 ஆண்டுகள்
|
வியாழன் – 7 ஆண்டுகள் 6 மாதங்கள்
|
சந்திரன் – 25 ஆண்டுகள்
|
சனி – 10 ஆண்டுகள்
|
வெள்ளி – 21 ஆண்டுகள்
|
செவ்வாய் – 13 ஆண்டுகள் 9 மாதங்கள்
|
புதன் – 6 ஆண்டுகள்
|
|
மொத்தம் 98 ஆண்டுகள் 6 மாதங்கள்
|
இப்போது,
அசுபக் கோளான செவ்வாய், உதய இராசியில் இருக்க, மொத்த ஆண்டுகளான 98 ஆண்டுகள் 6
மாதங்கள் என்பது க்ருரோதயஹரணா எனும் கழிவுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதாவது,
இராசி சக்கரத்தில் உள்ள 108 நவாம்சங்கள் மொத்த ஆண்டுகளைக் குறிக்கிறது. இப்போது,
அவை மேசத்தின் முதல் புள்ளியிலிருந்து கும்பத்தின் முதல் புள்ளி வரையில் 10 x 9 =
90 நவாம்சங்கள் ஆகும். எனவே, கழிக்க வேண்டிய அளவானது 90/108 x 98 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்தபின் = 16 ஆண்டுகள் 5
மாதங்கள் என்பது வாழ்நாள் எண்ணிக்கை ஆகும். இது நிச்சயம் 20 ஆண்டுகளுக்குக்
குறைவானது தான்.
………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment