வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
5. மனிதனுக்கும் யானைக்குமான அதிக பட்ச உயிர்வாழ்க்கை என்பது 120 ஆண்டுகள், 5 நாட்கள் ஆகும், அது குதிரைக்கு 32 ஆண்டுகள், கழுதை மற்றும் ஒட்டகத்திற்கு 25 ஆண்டுகள், எருதிற்கும் காளைக்கும் 24 ஆண்டுகள், நாய்க்கு(1) 12 ஆண்டுகள், ஆட்டிற்கும் அதுபோன்ற உயிரினங்களுக்கும்(2) 16 ஆண்டுகள் ஆகும்.
குறிப்பு:(திரு. சிதம்பரம்)
மிருகங்களின் வாழ்நாளைக் கண்டுபிடிக்கும் முறை. மனிதனுக்கு கணக்கிடுவதுபோல் கணக்கிட்டு அதன் விடையை அக்குறிப்பிட்ட விலங்கின் உயிர்வாழ் ஆண்டுகளால் பெருக்கி, அதனை 102 ஆண்டுகள் 5 நாட்களால் வகுக்க வேண்டும். அவ்வாறு வரும் விடையானது அக்குறிப்பிட்ட விலங்கின் வாழ்நாட்கள் ஆகும்.
(1)
நாய் மற்றும் பாத நகங்கள் உள்ள விலங்குகள், அதாவது, பூனை, புலி, சிங்கம் போன்றவை.
(2)
ஆடு, மான் மற்றும் அதுபோன்றவை
6. மீனத்தின் கடைசி நவாம்சம் உதயமாக இருந்து, புதனானது ரிசபத்தில் தற்போது 25 கலைகளைக் கடந்திருக்க, மற்றக் கோள்கள் தமது உச்ச வீட்டில் இருந்தால், அப்போது பிறக்கும் மனிதனின் உயிர்வாழ்நாள் என்பது அதிகபட்சமான, 120 ஆண்டுகள் 5 நாட்களாக இருக்கும்.
குறிப்பு: (திரு சிதம்பரம்)
மேல் குறிப்பிட்ட நிலையில் உள்ள சாதகம் கீழ்வருமாறு:
இலக்கினம்
சுக்கிரன்
|
சூரியன்
|
சந்திரன்
புதன்
|
|
|
இராசி சக்கரம்
|
வியாழன்
|
|
செவ்வாய்
|
|
||
|
|
சனி
|
|
புதனைத் தவிர, மற்ற அனைத்து கோள்களும் இங்கு உச்ச நிலையில் (அவைகள் தமக்குரிய உச்ச நிலை பாகைகள் இருப்பதாக உரையாசிரியர் கருதுவதுபோல்) இருக்க, அவைகள் அதிகபட்ச ஆண்டுகளைக் கொடுக்கும். புதனின் அதிகபட்ச ஆண்டுகள், அது உச்ச நிலையில் இருந்தால், அதாவது கன்னியின் 15 பாகையில் இருந்தால், 12 ஆண்டுகள், நீச்ச நிலையில் இருந்தால், அதாவது மீனத்தின் 15 பாகையில் இருந்தால், 6 ஆண்டுகள் கொடுக்கும். மீனத்தின் மீதமுள்ள 15 பாகைகள் நமக்கு கொடுப்பது 6 மாதங்கள். மேசம் நமக்கு ஒரு ஆண்டைத் தருகிறது. இப்போது, ரிசபத்தின் முதல் பாகையானது நமக்கு 12 நாட்களைக் கொடுக்கிறது, ஆகவே முதல் பாகையின் 25 கலைகள் நமக்கு கொடுப்பது 12/60 x 25 = 5 நாட்கள். அதன்படி, புதனின் ஆண்டுகள் = 6 ஆண்டுகள் + 6
மாதங்கள் + 1 ஆண்டு + 5 நாட்கள் = 7 ஆண்டுகள், 6 மாதம், 5 நாட்கள்.
மீண்டும், மீனத்தின் கடைசியானது உதயமாக இருக்க, உரையாசிரியரின் கருத்துப்படி, மீனத்தின் 9 நவாம்சங்கள் நமக்கு கொடுப்பது 9 ஆண்டுகள், அதன்படி, நமக்கு கிடைப்பதாவது:-
சூரியன் – 19 ஆண்டுகள்
|
வியாழன் –
15 ஆண்டுகள்
|
சந்திரன் – 25 ஆண்டுகள்
|
வெள்ளி –
21 ஆண்டுகள்
|
செவ்வாய் – 15 ஆண்டுகள்
|
சனி –
20 ஆண்டுகள்
|
புதன் – 7 ஆண்டுகள், 6 மாதங்கள், 5 நாட்கள்
|
இலக்கினம் – 9 ஆண்டுகள்
|
இப்போது, சக்ரபாதஹரனா எனும் கழிவினை, உதய இராசியிலிருந்து 11-ம் இடம் மற்றும் 8-ம் இடத்தில் இருக்கும் இரண்டு பாவக் கோள்களான செவ்வாய் மற்றும் சனி தரும் ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டும். ஆகவே கழிவின் அளவானது, செவ்வாய்க்கு அரை பாகமும், சனிக்கு ஐந்தில் ஒரு பாகமும் ஆகும். அதன்படி, இத்தகைய கழிவினை மேற்கொண்ட பிறகு, செவ்வாய்க்கு உரிய ஆண்டுகள் 7½, சனிக்கு உரிய ஆண்டுகள் 16. சத்ருக்ஷேத்ர ஹரனா, அஷ்டங்கத ஹரனா, க்ருரோதய ஹரனா போன்ற கழிவுகள் இங்கு மேற்கொள்ளப்பட வேண்டியதில்லை. இதன்படி கிடைக்கும் விடையானது:
|
ஆண்டுகள்
|
மாதங்கள்
|
நாட்கள்
|
சூரியன்
|
19
|
-
|
-
|
சந்திரன்
|
25
|
-
|
-
|
செவ்வாய்
|
7
|
6
|
5
|
புதன்
|
7
|
6
|
-
|
வியாழன்
|
15
|
-
|
-
|
வெள்ளி
|
21
|
-
|
-
|
சனி
|
16
|
-
|
-
|
இலக்கினம்
|
9
|
-
|
-
|
மொத்த உயிர்நாள்
|
120
|
-
|
5
|
குறிப்பு: நிமித்திகன்
இந்தக்
கணக்கீடு என்பது சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு வராகமிகிரரால் வரையறை செய்யப்பட்டது.
அக்காலத்தில் நீண்டநாட்கள் உயிர்வாழ்தல் என்பது அரிதான செயலாக இருந்த காலம். இன்று
பல்வேறு அறிவியல் வளர்ச்சி, நோய் தீர்க்கும் முறைகள் என்று வளர்ந்த நிலையிலும், அதிக
பட்ச உயிர்வாழ்நாட்கள் 120 ஆண்டுகள் என்பது தற்போதும் பொருந்தி வருகிறது. வலையில் தேடியபோது,
அதிகபட்சமாக ஒரு பிரஞ்சு பெண்மணி 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர்வாழ்ந்ததாக பதிவு உள்ளது.
………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment