வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
12.
சத்யாச்சாரியாரின் கருத்துப்படி, உதய பாகையான இலக்கினத்திற்கு உரிய ஆண்டுகள்,
மாதங்கள் போன்றவை, கடந்துபோகும்(1)(கோள்களைப் பொருத்தவரையில்)
நவாம்சங்களின் எண்ணிக்கைப் போலவே இருக்கும்; ஆனால், உதய இராசி பலமிகுந்து
இருந்தால்(2), அப்போது, கடந்துபோகும் இராசிகளானது, ஆண்டுகள், மாதங்கள்
போன்றவற்றைக்(3) குறிக்கும். க்ருரோதயஹரானா எனப்படும் கழிவு
சத்யாச்சாரியாரின் முறைக்குப் பொருந்தாது. மற்ற கழிவுகளைப் பொருத்தவரையில்(4),
முதல்பத்தியில் கொடுக்கப்பட்ட ஆண்டுகள் இதில் செயல்படாது.
குறிப்பு:(திரு. சிதம்பரம்)
(1) மேசத்தின்
நவாம்சத்தின் அடுத்துவருவதன் தொடக்கம்.
(2) பத்தி
19, பகுதி-1ல் குறிப்பிட்டவாறு.
(3) இந்த
பகுதியில் பத்தி 2-ல் குறிப்பு 4-ல் குறிப்பிட்டவாறு.
(4) சத்யாச்சாரியாரின்
முறைப்படி, பல்வேறு கழிவுகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகும் ஒவ்வொரு கோளின் சிறப்பு
ஆண்டுகள்
13.
ஆயுர்தயாவைப் பொருத்தவரையில், (மூன்று ஆயுர்தய முறைகளில்). சத்யாச்சாரியரின்
முறையே (அம்சாயுர்தயா எனப்படுவது), சிறப்புடையதாகும். கோள்களின் ஆண்டுகள் பலமுறை பெருக்கம்(1)
செய்யப்படுகிறது எனும் அடிப்படையில், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. அது
அவ்வாறில்லை; எவ்வொரு கால அளவும் பல்வேறு எண்களால் பெருக்கம் செய்யப்படும்போது, அந்த
கால அளவு மிகப்பெரும் எண்ணால்(2) பெருக்கப்படுமானால், அதுவே போதுமானது.
குறிப்பு: (திரு சிதம்பரம்)
(1) எடுத்துகாட்டாக,
புதன் கன்னியில் இருந்தால் அது அதன் உச்ச இராசி மற்றும் அதன் சொந்த வீடாகும்.
பத்தி 11-ன்படி, புதனின் ஆண்டுகள் முதலில் மும்மடங்காக ஆக்கப்பட்டு பின்னர்
இருமடங்காக ஆக்கப்படுகிறது. அவ்வாறு செய்ய இயலுமா? மேலும், ஒருவேளை கன்னியின்
கடைசி நவாம்சத்தில் புதன் இருப்பதாகக் கொள்வோம், அது வர்க்கோத்தம நிலையில்
இருக்கும். அதன் ஆண்டுகளனாது இருமடங்குக் கணக்கில் இருக்கும். அது தனது சொந்த
வீட்டில் இருப்பதால் அதன் ஆண்டுகள் இருமடங்காக இருக்க வேண்டும் என ஏற்கனவே
கணக்கிட்டுள்ளோம். மேலும், ஒருவேளை புதனானது கன்னியில் அதன் உச்ச இராசியில் வக்கிர
நிலையில் இருந்தால், அதன் ஆண்டுகள் மும்மடங்காக இருக்க வேண்டும். அவ்வாறன நிலையில் அதன் ஆண்டுகள் இருமுறை
மும்மடங்காக ஆக்க முடியுமா? முடியாது.
(2) எவ்வொரு
கால அளவும் இருமடங்காக, இருமுறை அல்லது மும்முறை ஆக்கபடவிருந்தால், அதனை ஒரே
ஒருமுறை இருமடங்காக்குவது போதுமானது. மேலும், எந்தக் கால அளவானது இருமடங்கு
மற்றும் மும்மடங்காக ஆக்கப்படவேண்டுமானால், அதனை ஒரே ஒருமுறை மும்மடங்காக ஆக்குவது
போதுமானது.
மனித்தா மற்றும் சாரவளியின் கருத்துப்படி, உதய இராசியின்
அதிபதி வலிமையான கோளாக இருந்தால், அம்சாயுர்தயா முறையைப் பின்பற்ற வேண்டும;. சூரியன் வலிமையானதாக இருந்தால், பிண்டாயுர்தயா
முறையைப் பயன்படுத்த வேண்டும்; சந்திரன் வலிமையுடையதாக இருந்தால், நைசார்கிக
முறையைப் பயன்படுத்த வேண்டும்.
மற்றவர்களின் கருத்துப்படி, தசா மற்றும் அந்தர தசை வாழ்நாள்
பிரிவுகளில் பிண்டாயுர்தயம் மற்றும் அம்சாயுர்தயா ஆகிய இருமுறைகளையும்
பயன்படுத்துவதுடன், இருமுறைகளாலும் நிகழ்வுகளைக் கணிக்க வேண்டும்.
அம்சகாயுர்தயாவிற்கு பட்டோத்பலா ஆதரவாக உள்ளார்.
குறிப்பு: (நிமித்திகன்):
இங்கு கூறப்பட்டுள்ள கணித முறைகளை, ஒரு சாதகத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு, அதனைக் கொண்டு கணக்கீடுகளைச் செய்தால் மட்டுமே எளிதில் புரியும். இங்கு நான் இதனை மொழியாக்கம் மட்டுமே செய்துள்ளேன். சொற்றொடர்கள் சற்று புரியாத நிலையில் இருப்பதுபோல் தோன்றும். இருப்பினும், ஆயுள் கணிதமுறைகள் பற்றி நிமித்திகனில் ஆய்வு செய்யும்போது முடிந்தவரை விளக்க முயல்கிறேன்.
………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment