வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
8. அதிகபட்ச
உயிர்வாழ் நாட்களை அளிக்கக்கூடிய நல்ல யோகங்கள் என்பன, சில சோதிடர்களின்(1)
வரையறைப்படி, அரசரின் வாழ்நாட்கள் ஆகும். இது ஒரு தவறான நிலைப்பாடாகும்(2). மற்றொரு தவறு என்னவெனில், அரச யோகத்தில்
பிறக்கும் ஒரு மனிதன், பெரும்பாலும் நீண்ட வாழ்நாளுடன், வறுமையில் வாழ்பவனாக
இருக்கிறான்.
குறிப்பு:(திரு. சிதம்பரம்)
(அ)
பத்ராயணா மற்றும் யவனேஸ்வரரின் கருத்துப்படி.
(ஆ)
இதன் கருத்து என்னவெனில், பெரும்பாலான அரசர்கள் குறுகிய வாழ்நாட்களைக்
கொண்டிருக்கிறார்கள் அல்லது பெரும்பாலான பிச்சைக்காரர்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள்.
மறுப்பதற்கான
காரணங்கள் வருமாறு:
பிண்டாயுர்தயத்தின்படி,
நல்ல யோகம் என்பது ஒரு மனிதனுக்கு அதிகபட்ச வாழ்நாட்களைக் கொடுப்பதானது சில
சோதிடர்களால் இராஜ யோகம் என கருதப்படுகிறது. இந்த வகையில், பல கோள்கள் தமது உச்ச
பாகையில் இருப்பது (பத்தி -1, பகுதி—XI). உரையாசிரியர் இந்த பத்தியையும் (நூல்
ஆசிரியர் அல்ல), ஏற்புடையது அல்ல என மறுக்கிறார். ஆக, ஒரு குறிப்பிட்ட யோகமானது,
ஒருவருக்கு நீண்ட உயிர் வாழ் நாட்களையும் அரச
வாழ்க்கையையும் கொடுப்பது என்பது ஏற்கமுடியாது. இதன் இன்னொரு மறுப்பு என்னவெனில்,
இது நிகழாத நிலையில், நிரூபிக்கப்படவும் முடியாத நிலையில், இந்த வரிகள்
நகைப்பிற்கு உரியது.
9.
ஜீவசர்மாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு கோளும் உச்ச வீட்டிலும் பாகையிலும்
இருக்கும்போது கொடுக்கும் அதிக பட்ச ஆண்டுகள் என்பது, மனிதனின் அதிக பட்ச உயிர்
வாழ்நாட்களில் – 120 ஆண்டுகள், 5 நாட்களில் -
ஏழில் ஒரு பங்கு கொடுக்கும் – அது 17 ஆண்டுகள், 1 மாதம், 22 நாட்கள், 8
கதிகள். 34.3 விகதிகள் = 17.144484 ஆண்டுகள், எதுவும் நீங்கலாக(1), என
இருக்கும். இந்தக் கருத்தினை ஜீவசர்மா மட்டுமே கூறுகிறார், இது மற்றவர்களால்
ஆதரிக்கப்படவில்லை. சத்யாச்சாரியாரின் கருத்துப்படி, கோள்களின் ஆண்டுகளானது, ஒரு
கோளால்(2) நவாம்சங்கள் கடக்கப்படும் எண்ணிக்கைக்குச் சமம். இந்தக்
கருத்து பலரால் ஆதரிக்கப்படுகிறது.
குறிப்பு:(திரு. சிதம்பரம்)
(1) பிண்டாயுர்தயத்தைப்
போலவே, பல்வேறு கழிவுகள் செய்யப்பட வேண்டும், அதன்பின் உயிர்வாழ் நாட்கள் உறுதி
செய்யப்படவேண்டும்.
(2) மேசத்தின்
நவாம்சத்திலிருந்து தொடங்கிட வேண்டும், அதன்படி, எவ்வொரு கோளும் 12 ஆண்டுகளுக்கு
மேல் கொடுக்காது.
………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment