வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஏழு
ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)
10.
சத்யாச்சாரியாரின் கருத்துப்படி, கோளின் ஸ்புடம் அல்லது அட்ச ரேகையினை, கலையாக
மாற்ற வேண்டும்; விகலையை 200-ஆல் வகுக்க வேண்டும்; கிடைக்கும் ஈவானது ஒரு கோளால், மேசத்தின் ஆரம்பப் புள்ளியிலிருந்து
கடக்கப்படும் நவாம்சத்தின் எண்ணிக்கையாக இருக்கும். அதனை 12-ஆல் வகுக்க, மீதமானது,
மேசத்தின் நவாம்சத்திலிருந்து உள்ள நவாம்சங்களின் எண்ணிக்கையாகும், மேலும் அந்த
எண்ணிக்கையானது, கோளிற்கான ஆண்டுகளின் எண்ணிக்கையையும், பின்னமானது ஒரு ஆண்டின்
பகுதியினையும் குறிக்கும்.
குறிப்பு: (திரு சிதம்பரம்)
எடுத்துக்காட்டாக,
சூரியனின் அட்சரேகையானது 115 பாகைகள் 13 கலைகள் எனக் கொள்வோம். இதனை மாற்றினால்
6913 கலையாக இருக்கும். இப்போது, ஒரு நவாம்சம் 200 கலைகள் கொண்டிருக்கும்,
மேசத்தின் முதல் புள்ளியிலிருந்து சூரியன் கடக்கும் நவாம்சங்களின் எண்ணிக்கையானது
= 6913/200 = 34 113/200. இதனை 12-ஆல் வகுக்க, நமக்குக் கிடைக்கும் மீதியானது,
மேசத்தின் நவாம்சத்தினையடுத்து 10 113/200 நவாம்சங்கள் ஆகும். இது அதன் பிறகு,
சூரியனின் ஆண்டுகளைக் குறிக்க, அது 10 ஆண்டுகள், 6 மாதங்கள், 23 நாட்கள், 24
கதிகள் என வரும், அது போலவே பிற கோள்களுக்கும்.
11.
மேலும், ஏதேனும் ஒரு கோள் உச்ச இராசியில் இருந்தால் அல்லது வக்கிரத்தில்
இருந்தால், அதற்கு அளிக்கப்பட வேண்டிய ஆண்டுகள், மும்மடங்காகும்; மேலும் கோளானது
வர்கோத்தமம் அல்லது நவாம்சம் அல்லது ஸ்வக்ஷேத்ரா அல்லது திரேக்காணத்தில்
இருந்தால், அதனுடைய ஆண்டுகள் இருமடங்காகும். மேற்படியானது, சத்யாச்சாரியரின்
ஆயுர்தயத்தில் உள்ள சிறப்புத் தன்மையாகும். மற்றவைகளைப் பொருத்தவரையில், இது
பிண்டாயுர்தயா முறையினை ஒத்திருப்பதால், முன்பு கூறிய பல்வேறு கழிவுகள்(1) தற்போதைய
முறைக்கும் பொருந்தும்.
குறிப்பு: (திரு சிதம்பரம்)
(1) இவைகள்,
செவ்வாய் நீங்களாக சத்ரு-க்ஷேத்ரஹரனா, சுக்கிரன் மற்றும் சனி நீங்களாக
அஷ்டங்கதஹரனா, சக்கரபாடஹரனா என்பவையாகும். க்ருரோதய-ஹரனா எனப்ப்படும் இந்தக்
கழிவானது சத்யாச்சாரியாரின் முறைக்கு பொருந்தாது (பத்தி-12).
காரகரின் கருத்துப்படி, நீச்ச இராசியில் உள்ள ஒரு கோள்
பத்தி-2ல் குறிப்பு-7ல் குறிப்பிட்டவாறு, பாதியை இழக்கும் – இது நிச்சயம்
செய்யப்பட வேண்டிய சக்ரபாதஹரனா நீங்களாக. மற்றக் கழிவுகளைப் பொருத்தவரையில், ஒரு
கோளின் ஆண்டிற்கு பல்வேறு கழிவுகள் செய்ய வேண்டி இருப்பின், அதில் பெரியது ஒன்றைச்
செய்தால் போதும். இவ்வாறு சொல்வது பட்டோத்பலா, வேறு எவரும் கூறவில்லை. இது,
முதலில் கழிவுகளை மேற்கொள்வதோ, அதன் பின் மீதியை இருமடங்காக்குவது அல்லது
மும்மடங்காக்குவது அல்ல்து முதலில் பெருக்குவது அதன்பின் கழித்து அதை
பயன்படுத்துவது என்பதுபோலவே ஆகும்.
………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-16
|
No comments:
Post a Comment