ஒவ்வொரு கோளும் இராசி மண்டலத்தில் உள்ள 12
இராசிகளில் ஏதேனும் ஒரு வீட்டில் உச்ச நிலையை அடையும் என்பது சோதிட விதி. உச்சம் என்பது
தன் நிலையில் அதிகபட்சமாக உயர்ந்து நிற்பது எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது உச்ச நிலையில்
அக் குறிப்பிட்ட கோள் அதிபட்சத் திறனோடு இருக்கும்.
வான் வெளிச் சுற்றுப்
பாதையில் சுற்றி வரும் கோள்கள் தமது கதிரியக்கத்தை அல்லது காந்த வீச்சினை அல்லது ஒளிப்
பிரதிபலிப்பை அல்லது சுய ஒளியை பரப்புகின்றன என்பது வான் அறிவியல் உண்மை. அவ்வாறு பரவல்
செய்யப்படும் ‘வீச்சுகள்’ பூமியின்மீதும் விழும் என்பதும் வான் அறிவியல் உண்மை. ஆனால்
அவ்வாறன ‘வீச்சானது’ எப்பொழுதும் ஒரே அளவில் இருக்குமா எனும் கேள்விக்கு இல்லை என்பதே
பதில். ஏனெனில், பூமியின் சுற்றுப்பாதை, குறிப்பிட்ட கோளின் சுற்றுப்பாதை, இவைகளுக்கிடையே
உள்ள கோண விகிதங்கள் ஆகியவையே, அத்தகைய பரவலின் வலிமையைத் தீர்மானிக்கின்றன.
ஆக, கோள்களின் கதிர் வீச்சானது, ஒரு குறிப்பிட்ட
கோண அளவில் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் கோள்கள் இருக்கும்போது அதிகமாகவோ அல்லது
குறைவாகவோ இருக்கின்றன.
அதிகமாக இருக்கும் நிலையினை உச்சம் என்றும்
குறைவாக அல்லது மறைவாக இருக்கும் நிலையினை நீச்சம் என்றும் சோதிட நூல்கள் கூறுகின்றன.
கோள்கள் தமது உச்ச, நீச்ச நிலைகளை தம்முடைய
சொந்த வீட்டில் அடைவதில்லை [புதன் விதிவிலக்கு] என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோதிட அறிஞர்கள், மிகத் துள்ளியமாக, கோள்கள்
எத்தனை பாகையில் உச்ச நிலையில் இருக்கின்றன, எத்தனை பாகையில் அவை நீச்ச நிலையில் இருக்கின்றன
என்று வகுத்துள்ளனர்.
உச்ச நிலையில் உள்ள ஒவ்வொரு கோளும், அதற்கு
நேரெதிரான 180 பாகையில் நீச்ச நிலையில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளனர்.
ஆக கோள்களின் உச்சம் என்பது, முழுக் கதிர்வீச்சினைப்
பூமியின் மீது பாய்ச்சும் இருப்பிட நிலை என்றும், அதற்கு நேரெதிராக கதிர்வீச்சின் தாக்கம்
மிகக் குறைவாக பாய்ச்சும் இருப்பிட நிலை நீச்சம் என்றும் வகுத்துரைக்கலாம்.
... அடுத்து நட்பு-பகை
No comments:
Post a Comment