Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, July 8, 2016

அசுபக்கோள்கள் தரும் உயிர்வாழ் நாட்கள் – பிருகத் ஜாதகா – 72


  
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

பிருகத் ஜாதகா


பகுதி   -  ஏழு

ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)


3. அசுபக் கோள்கள், உதய இராசியிலிருந்து, 12வது, 11வது, 10வது, 9வது, 8வது அல்லது 7வது வீட்டில் இருந்தால், கழிவானது, முறையே முழு, அரை, மூன்றில் ஒன்று, கால், ஐந்தில் ஒன்று, ஆறில் ஒன்று என ஆண்டின் கணக்கில் குறைக்க வேண்டும்(1). மேற்குறிப்பிட்ட வீடுகளில் சுபக் கோள்கள் இருந்தால், கழிவானது மேலே கூறியதில் ஒவ்வொன்றிலும் பாதியளவு(2) கழிக்க வேண்டும். ஆனால், ஒரே இராசியில் பல கோள்கள் இருந்தால், கழிவானது, அதில் வலிமையானதைக் கணக்கில் கொண்டு கழிக்க வேண்டும். இது சத்யாச்சாரியாரின் கருத்தாகும்(3).


குறிப்பு (திரு. சிதம்பரம்) :

இந்த கழிவு என்பது சக்ரபாதஹரனா என அழைக்கப்படுகிறது, இதனை அவசியம் செய்யவேண்டும். இரண்டு கழிவுகள் செய்யும்போது, ஒன்றை முதலிலும், மற்றொன்றை அதன்பின் கிடைக்கும் விடையிலும் செய்ய வேண்டும். இறுதி விடை ஒன்றாகவே இருக்கும்.
(1)   முறையே 0, ½, 2/3, ¾, 4/5, 5/6  ஆண்டுகள் என எடுத்துக் கொள்ள வேண்டும்.

(2)   அசுபக் கோள்களுக்கு முழுமையான கழிவினை எடுத்துக் கொள்ள வேண்டும் எனும்போது, சுபக் கோள்களுக்கு பாதியே எடுத்துக் கொள்ள வேண்டும்; முந்தையதற்கு பாதியளவு எனும்போது, பிந்தையதற்கு கால்பாகம் எடுத்துக் கொள்ள வேண்டும், அது போலவே மற்ற அளவுகளுக்கும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, ½. ¾, 5/6, 7/8, 9/10, 11/12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

(3)   இதனை வராக மிகிரர் உறுதி செய்கிறார்.



4.  உதய இராசியில் ஒரு அசுபக் கோள்(1) இருந்தால், மேசத்தின் முதல் புள்ளிக்கும் உதய நவாம்ச இலக்கினத்திற்கும் இடையே உள்ள நவாம்ச எண்ணிக்கையால் கணக்கிடப்பட்டு வந்த ஆண்டுகளால் பெருக்க வேண்டும், அதன் விடையை 108-ஆல் வகுக்க வேண்டும். மீதி(2)யாய் வருவதானது கழிக்க வேண்டிய ஆண்டாக(3) இருக்க, அதனை ஏற்கனவே கணக்கிடப்பட்ட மொத்த ஆண்டுகளில்(4) கழிக்க வேண்டும். ஆனால், ஒரு அசுபக் கோள், சுபக் கோளால் பார்க்கப்பட்டால், கழிக்க வேண்டிய ஆண்டுகள் என்பது, மேல் கூறப்பட்டதில் பாதியளவாக இருக்க வேண்டும்.


குறிப்பு (திரு சிதம்பரம்):

(1)   பத்ராயனாவின் கூற்றுப்படி சூரியன், செவ்வாய் அல்லது சனி மற்றும் வளர்பிறை இல்லாத சந்திரன். மற்றும், ஒரு சுப மற்றும் அசுபக் கோள் ஆகிய இரண்டும் உதய இராசியில் இருந்தால், கழிவானது, உதய இராசிக்கு அருகில் உள்ள கோளுக்கு கணக்கிட வேண்டும்.

(2)   உதய நவாம்சத்தின் பின்ன எண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

(3)   இத்தகைய கழிவிற்கு க்ருரோதயஹரனா என்று பெயர்.

(4)   சாரவளியின் கருத்துப்படி, கழிக்க வேண்டிய ஆண்டுகள் என்பது, ஏற்கனவே பெறப்பட்ட மொத்த ஆண்டுகளை, உதய இராசிக்கு உரிய நவாம்சங்களின், அதாவது உதயத்திற்கு மேலாக உள்ளதைஇராசி சக்கரத்தில் உள்ள மொத்த நவாம்சங்கள் -  108-ஆல் வகுத்த பிறகு வரும் எண்ணிக்கையால், பெருக்கி வருவதாகும். இதனை உரையாசிரியர் உறுதி செய்கிறார். இந்த விளக்கம் இரண்டிற்கும் உரியதாகும்.


………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16


No comments: